பிரதமர் மோடி தேர்தலை கருத்தில் கொண்டு தமிழகத்திற்கு வரவில்லை, பல திட்டங்களை கொடுப்பதற்காகவே தமிழகத்திற்கு பலமுறை வந்ததாக, பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்தார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக அரசு நிர்வாகம் மோசமாக உள்ளதாகவும், விரைவில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்படும் என கூறினார்.