“உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு 5 சதவீதம் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் இடங்களை உறுதி செய்ய வேண்டும்” என மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பல்கலைக்கழகங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இதில், “2016-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டத்தின்படி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்” என்றும், பொறியியல், கலை, அறிவியல், மருத்துவம், சட்டம் உள்ளிட்ட அனைத்து வகையான படிப்புகளை வழங்கும் பல்கலைக்கழகங்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.