ஆம் ஆத்மி கட்சியின் எம்பி ஸ்வாதி மாலிவால் கூறியிருப்பது வேதனையளிக்கிறது என பாஜக முக்கிய நிர்வாகி ஷாஜியா இல்மி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஷாஜியா இல்மி,
அரவிந்த் கெஜ்ரிவாலின் பாதுகாப்பில் உள்ள பிபவ், ஸ்வாதி மாலிவாலை அடித்து உதைத்துக்கொண்டே இருந்துள்ளார் என தெரிவித்தார்.
மேலும், இச்சம்பவம் ஆம் ஆத்மி கட்சியினரின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை காட்டுவதாகவும், அவர்களின் கட்சியில் வன்முறையும், ரவுடிகள் ஆதிக்கமும் இருப்பது தற்போது வெளியில் தெரியவந்துள்ளதாகவும் கூறினார்.