குளுக்கோஸ் குடித்து ஒரு மணி நேரத்திற்குப் பின் ரத்தப் பரிசோதனை செய்வது நீரிழிவு நோயின் அபாய அறிகுறிகளைச் சரியான முறையில் கண்டுபிடிக்க உதவுகிறது என்று இந்தியாவில் சர்க்கரை நோய் பற்றிய ஆய்வுக்கான ஆராய்ச்சி சங்கம் தெரிவித்துள்ளது.
அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்தியாவில் 1972ம் ஆண்டு தொடங்கப்பட்ட சர்க்கரை நோய் பற்றிய ஆய்வுக்கான ஆராய்ச்சி சங்கம், இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் பிரதிநிதிகளுடன் நீரழிவு நோய் பற்றியும் நோய் பரிசோதனை முறைகள், நோய்க்கான சிகிச்சை முறைகள் குறித்தும் ஆய்வுகள் செய்து வருகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை, 101 மில்லியன் மக்கள் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் 136 மில்லியன் இந்திய மக்கள் ப்ரீ டையாபிட்டீஸ் எனப்படும் நோயின் ஆரம்ப நிலை பாதிப்பில் இருக்கிறார்கள்.
இந்நிலையில், அண்மையில் சர்க்கரை நோய் கண்டறியும் ரத்த பரிசோதனையில் புது முறையைக் கண்டுபிடித்த இந்த சங்கம், வளரும் நாடுகளில் உள்ள நீரழிவு நோய் பற்றிய சர்வதேச மருத்துவ இதழில் , இந்த பரிசோதனையின் ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
அதாவது, (155mg/dL) ஐ 155 மில்லிகிராமை விட அதிகமாக சர்க்கரை அளவுள்ள நபர்களிடம், குளுக்கோஸ் குடித்து ஒரு மணி நேரத்திற்குப் பின் எடுக்கப் பட்ட இரத்த பரிசோதனையின் முடிவுகள், அந்த நபர் ‘PRE DIABETIS” என்ற நிலையில் இருந்து முழு சர்க்கரை நோயாளியாக விரைவில் மாறுவார் என்பதை மிகத் துல்லியமாக எடுத்துக் காட்டுகிறது.
சாப்பாட்டுக்கு முன் மற்றும் சாப்பாட்டுக்கு பின் இரண்டு மணிநேரம் கழித்து எடுக்கும் பரிசோதனைகளில், ரத்தத்தின் குளுக்கோஸ் அளவு சாதாரணமாக இருக்கும் மக்களுக்கு இந்த புதிய ஒரு மணி நேர பரிசோதனையை இந்தியாவில் நீரிழிவு ஆய்வுக்கான ஆராய்ச்சி சங்கம் பரிந்துரை செய்துள்ளது.
ரத்தத்தின் குளுக்கோஸ் அளவுகளை ஆரம்பநிலைகளில் கண்டறிவது நீரழிவு நோயைத் தடுக்கவும், சிகிச்சை முறைகளை நோயின் தன்மைக்கு ஏற்ப சீரமைக்கவும் உதவும் என்று , இந்திய நீரிழிவு ஆய்வுக்கான ஆராய்ச்சி சங்கத்தின் தலைவர் ராகேஷ் சஹே கூறியிருக்கிறார்.
நீரழிவு நோயைத் தொடக்கத்திலேயே கண்டறிவது தான் மிகச் சிறப்பான முதன்மையான தடுப்பு முறை என்றும், ஆரம்பக் காலங்களில் நோயைக் கண்டறிவதால் , உணவு மற்றும் உடற்பயிற்சி உள்ளிட்ட வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலமாக சர்க்கரை நோயை எளிதாக குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சர்க்கரை நோய்க்கான ரத்த பரிசோதனைகள் உணவுக்கு முன் மற்றும் உணவுக்குப் பின் என்று எடுக்கப்படும் நிலையில், இப்போது இந்த புதிய பரிசோதனை என்பது, சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதை எளிதாக்கும் என்றும், பீட்டா செல் செயல்பாடுகளின் இழப்புக்கள் வேகமாக நிகழ்வதால் இன்சுலின் சுரப்பதும் அதிகமாகிறது என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்திய நீரிழிவு ஆய்வுக்கான ஆராய்ச்சி சங்கத்தின் இந்த புதிய பரிந்துரைகள் இந்தியாவிலும் , உலகின் பிற நாடுகளிலும் பலரிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் உருவானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில், 30 000 பேர்களிடம் நடத்தப் பட்ட இந்த ஆய்வுகளில் சாதாரண குளுக்கோஸ்மற்றும் இரண்டு மணிநேர குளுக்கோஸ் பரிசோதனைகள் செய்யப்பட்டதில், 12 சதவீத பேர் நீரழிவு நோய்க்கு இருந்தது 6 ஆண்டுகளுக்குள் அவர்களில் 32.6 சதவீதம் பேர் சர்க்கரை நோய் ஏற்பட்டது.
இந்த புதிய ஒருமணி நேர பரிசோதனை செய்யப்பட்டதில், 19 சதவீதம் பேர் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 52 சதவீதம் பேர் ‘ப்ரீடியாபயாட்டீஸ்’ சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
(155mg/dL) சர்க்கரை அளவு 144மில்லிகிராம் முதல் 155 மில்லிகிராம் வரை இருந்த குழுவில் பரிசோதனை நடத்தப்பட்டதில், 10 சதவீத பேருக்கும் , அதை விட குறைந்த அளவு உள்ளவர்களில் நடத்திய சோதனையில் 6 சதவீத பேருக்கும் நீரழிவு நோய் ஏற்பட்டதாக , இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
இந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசியாவைப் பொறுத்தவரை இந்த ஆய்வின் பரிந்துரைகள் மிக முக்கியமானதாகும். இப்போது இல்லையெனில் எப்போதும் இல்லை என்பது சர்க்கரை நோய்க்கு கிடையாது. வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள், உணவு முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற காரணங்களால் திடீரென நீரழிவு நோய் வரலாம்.
எனவே , இந்திய நீரிழிவு ஆய்வுக்கான ஆராய்ச்சி சங்கத்தின் இந்த ஆய்வின் பரிந்துரைகள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.