நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் நான்கு பேரை கடித்த மந்தி குரங்கை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிவந்திபுரம் கிராமத்தில் கடந்த ஐந்து நாட்களாக நான்கு பேரை மந்தி வகை குரங்குகள் கடித்தன.
இந்நிலையில் கொட்டும் மழையில் குரங்குகளை தீவிரமாக தேடி வந்த வனத்துறையினரிடம் இரண்டு குரங்குகள் சிக்கியது. அதனை மேற்கு தொடர்ச்சி மலையின் பாதுகாப்பான பகுதியில் விட்டனர்.