ஈரோட்டில் ஓடும் ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த சுமார் 9 கிலோ கஞ்சாவை ரயில்வே இருப்புப்பாதை போலீசார் கைப்பற்றினர்.
ஜார்க்கண்ட்டில் இருந்து எர்ணாகுளம் வரை செல்லும், டாட்டா நகர் எக்ஸ்பிரஸ் ரயில் ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது.
இந்நிலையில், ஈரோடு ரயில்வே இருப்புப் பாதை போலீசார் சோதனை நடத்திய போது கழிவறை அருகே பை ஒன்று கேட்பாரற்று கிடந்துள்ளது.
அதனை பிரித்து பார்த்தபோது சுமார் 9 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.