மறு அறிவிப்பு வரும்வரை குற்றால அருவிகள் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில் மணிமுத்தாறு அருவியிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பழைய குற்றாலம் பகுதியில், நேற்று திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதில் 17 வயதான சிறுவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லபட்டு உயிரிழந்தார். இதனையடுத்து, குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து அருவிகளிலும் பேரிகார்டுகள் அமைத்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதேபோல நெல்லையில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்து வருவதால் மணிமுத்தாறு அருவியிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை சார்பில் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.