சென்னை மாநகராட்சி சார்பில் 3 இடங்களில் விலங்கின கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்படும் நிலையில் அவை ஜூலை மாதத்தில் பயன்பாட்டுக்கு வரவுள்ளன.
சென்னையில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அதனை கட்டுப்படுத்த இயலாமல் மாநகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது.
இதனையடுத்து புளியந்தோப்பு, லாயில்ஸ் காலனி, கண்ணம்மாப்பேட்டை ஆகிய 3 இடங்களில் சுமார் 20 கோடி ரூபாயில் விலங்கின கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த 3 மையங்களும் வரும் ஜூலை மாத இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் என மாநகர தலைமை கால்நடை மருத்துவ அதிகாரி கமால் உசேன் தெரிவித்துள்ளார்.