நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கால்நடைகளை கொன்ற சிறுத்தை வனத்துறை சார்பில் வைக்கப்பட்ட கூண்டில் சிக்கியது.
வேம்பையா புரம் பகுதியில் உள்ள கால்நடைகளை சிறுத்தை கவ்விச் சென்றது. இதனையடுத்து அப்பகுதியில் சிறுத்தையை பிடிக்க வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டது.
மேலும் ட்ரோன் கேமரா மூலமும் சிறுத்தையின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது. இந்நிலையில் வனத்துறை சார்பில் வைக்கப்பட்ட கூண்டில் சிறுத்தை ஒன்று சிக்கியது.
இதனைத் தொடர்ந்து கூண்டில் சிக்கிய சிறுத்தை புலிகள் காப்பக இயக்குனர் இளையராஜா அறிவுறுத்தலின் பேரில் அப்பர் கோதையார் பகுதியில் விடப்பட்டது.