கன்னியாகுமரி மாவட்டம், திருத்துவபுரம் மூவொரு இறைவன் பேராலய திருவிழா கொடியேற்ற நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.
ஆலயத்தில் இருந்து அர்சித்து எடுத்து வரப்பட்ட திருக்கொடியை பங்கு குழந்தைகள் நடனமாடி வரவேற்றனர்.
பின்னர் கொட்டும் மழையிலும் திருக்கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் ஜெப மாலை மற்றும் திருப்பலி ஆகியவை நடைபெறவுள்ளன.