சி-விஜில் செயலி மூலம் பெறப்பட்ட 4 லட்சத்து 24 ஆயிரம் புகார்களில் இதுவரை 4 லட்சத்து 23 ஆயிரத்து 908 புகார்களுக்குத் தீர்வு காணப்பட்டிருப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக பொதுமக்கள் சி-விஜில் என்ற செயலி வாயிலாக புகார் அளிக்கலாம் என தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
அதன்படி இதுவரை 4 லட்சத்து 24 ஆயிரம் புகார் பெறப்பட்டதாகவும், அதில் 4 லட்சத்து 23 ஆயிரத்து 908 புகார்களுக்குத் தீர்வு காணப்பட்டிருப்பதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மீதமுள்ள 409 புகார்கள் விசாரணையில் இருப்பதாக கூறிய தேர்தல் ஆணையம், 89 சதவீத புகார்களுக்கு வெறும் 100 நிமிடத்தில் தீர்வு கண்டதாக தெரிவித்துள்ளது.