வடமேற்கு இந்தியாவில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்லி, ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடுமையான வெப்பம் நிலவும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல கிழக்கு மற்றும் மத்திய இந்தியாவில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்ப அலை அதிகரிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.