கரூரில் குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் கரூர் – வேலூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மாநகராட்சிக்குட்பட்ட 4-வது வார்டில் மழைநீர் வடிகாலுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் குடிநீர் குழாய் மற்றும் சாலை வசதி துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 15 நாட்களுக்கும் மேல் குடிநீர் வழங்காததாக கூறி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.