ஆம் ஆத்மி எம்.பி சுவாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கில் டெல்லி முதலமைச்சரின் உதவியாளர் பிபவ் குமாரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தீஸ் ஹசாரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 13ஆம் தேதி டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்றபோது அவரது உதவியாளர் பிபவ் குமாரால் தாக்கப்பட்டதாக ஆம் ஆத்மி எம்.பி சுவாதி மாலிவால் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக சுவாதி மாலிவால் அளித்த புகாரின்பேரில் , உதவியாளர் பிபவ்குமாரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் பிபவ் குமாரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.