ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட மேஸ்திரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலிசார் சிறையில் அடைத்தனர்.
சூரம்பட்டி பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரியான மூக்கையன், வீட்டிற்கு அருகில் வசிக்கும் 10 வயது சிறுமிக்கு நீண்ட நாட்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து, ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கட்டிட மேஸ்திரி மூக்கையனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.