சுபமுகூர்த்தத்தை முன்னிட்டு திண்டுக்கல் மலர் சந்தையில் பூக்களின் விலை கடும் உயர்வை கண்டுள்ளது.
வைகாசி மாதம் பிறந்துள்ள நிலையில் முதல் முகூர்த்த தினமான இன்று திண்டுக்கல் மலர் சந்தையில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
அதன்படி ஒரு கிலோ மல்லிகை பூ 1000 ரூபாய்க்கும், முல்லை பூ 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.