தேனி சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் கரையோர மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 121.28 அடியாக உயர்ந்துள்ளது.
இதனையடுத்து பெரியகுளம், வடுகபட்டி, ஜெயமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை பொதுப்பணித்துறை விடுத்துள்ளது.