தேனி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் சின்ன சுருளி அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, ஆண்டிபட்டி சின்னசுருளி அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்திருந்தது.
இந்நிலையில் தேனி மாவட்ட மலைப்பகுதிகளில் கன மழைக்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் வரும் 23-ம் தேதி வரையிலான 4 நாட்கள் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.