கன்னியாகுமரியில் அதிகன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அம்மாவட்டத்திற்கான அவசர அழைப்பு எண்களை தீயணைப்புத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
குமரி மாவட்டதில் மிக கனமழை பெய்யும் எனவும், ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் பேச்சிபாறை, கோழிபூர்விளை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கன முதல் மிக கன மழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து நீர் நிலைகளிலும் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது.
இதனால் பேச்சிபாறை அணையின் நீர்மட்டம் 45 புள்ளி 72 அடியாகவும் ,பெருஞ்சாணி அணையின் நீர் மட்டம் 48 புள்ளி 82 அடியாகவும் சிற்றாறு 1,2 அணைகள் 10 புள்ளி 82 அடியாகவும் உயர்ந்துள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வரும் காரணமாக கோதையாறு,தாமிரபரணிஆறு, பரளியாறு உள்ளிட்ட நீர் நிலைகளில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பு வசதிக்காக அவசர கால எண்களை தீயணைப்புத்துறையினர் வெளியிட்டுள்ளனர்.
அதில், கன்னியாகுமரிக்கு- 7305095992, குழித்துறை -7305095994, குலசேகரம் -7305095997,
தக்கலை – 7305095998, குளச்சல் – 7305095996,கொல்லங்கோடு -7305095998, திங்கள் நகர்- 04651 223799 ஆகிய எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட தீயணைப்பு அதிகாரி சத்யகுமார் அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.