ஆலங்குளம் அருகே பெண் அரசு ஊழியரிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த சாந்தி மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சாந்தி அணித்திருந்த தங்க சங்கிலியை பறித்துச் சென்றுள்ளார்.
இதுகுறித்து அவர் புகாரளித்த நிலையில், விசாரணை மேற்கொண்ட போலீசார் செயின் பறிப்பில் ஈடுபட்ட ஆகாஷ் என்ற நபரை கைது செய்து அவரிடமிருந்த செயினை பறிமுதல் செய்தனர்.