கேதார்நாத்தில் ஆற்றில் தவறி விழுந்த பக்தரை மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்டனர்.
கேதார்நாத்தில் புனித யாத்திரை தொடங்கிய நிலையில், சோன்பிரயாக் பகுதியில் பக்தர் ஒருவர் ஆற்றில் நீராட இறங்கினார்.
அப்போது திடீரென அவர் கால்தவறி ஆற்றில் விழுந்ததால், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பேரிடர் மீட்புப் படையினர், உடனடியாக கயிற்றைப் பயன்படுத்தி அவரை மீட்டனர்.