டெல்லியில் பாஜக தலைமையகத்தை முற்றுகையிட முயன்ற ஆம் ஆத்மி தொண்டர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மலிவால் விவகாரத்தில் பிபவ் குமார் கைது செய்யப்பட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நூற்றுக்கணக்கான ஆம் ஆத்மி தொண்டர்கள், பாஜக தலைமையகத்தை முற்றுகையிட வந்தனர்.
அப்போது பாஜக அலுவலகத்திலிருந்து 500 மீட்டர் தொலைவிலேயே அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
மேலும், பாஜக தலைமையகம் உள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.