குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் மட்டும் பங்கேற்கும் பேஷன் ஷோ நடைபெற்றது.
தன்னார்வ அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த பேஷன் ஷோ-வில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 75 பெண்கள் கலந்துகொண்டனர்.
அப்போது கண்கவர் ஆடைகளை அணிந்து ஒய்யாரமாக நடந்து வந்து அசத்தினர்.
புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், ஆரம்பகால நோயறிதலின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காகவும் நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.