அமெரிக்காவில் பரவியிருக்கும் புதிய வகை பாதிப்பு இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பரவியுள்ள FLiRT வகை கொரோனா வைரஸ், மகாராஷ்டிராவில் 91 பேருக்குக் கண்டறியப்பட்டுள்ளது.
FLiRT வகை கொரோனா மாறுபாடு என்பது ஒமிக்ரானின் துணை வைரஸாகும். இந்த வைரஸ் இங்கிலாந்து, தென்கொரியா போன்ற நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது.
இந்தியாவில் இந்த வைரஸின் பாதிப்பு அதிகமாக இருக்காது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.