திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதிய நிலையில் நேற்று ஒரே நாளில் 90 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூட்டம் அலைமோதுகிறது.
மேலும் இலவச தரிசனத்திற்காக நாள் முழுவதும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 90 ஆயிரத்து 721 பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர்.