இலங்கையின் நுவரெலியா பகுதியில் உள்ள சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
நுவரெலியா பகுதியில் உள்ள சீதா அம்மன் கோயில், ராவணன் சீதையை பணயக்கைதியாக வைத்திருந்த இடமாக கருதப்படுகிறது.
இந்த கோயில் கும்பாபிஷேக விழா சில நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.
கும்பாபிஷேக விழாவிற்காக அயோத்தியில் இருந்து கொண்டுவரப்பட்ட 5 புனித கலசங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இந்த விழாவில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.