3-வது முறையாக மோடி பிரதமரானால் ஆறே மாதங்களில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்படுமென உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் துலே பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், பாகிஸ்தானின் நிலைமை மோசமாக உள்ளதாகவும், இந்தியாவுடன் இணைய வேண்டுமென அந்நாட்டு மக்கள் விரும்புவதாகவும் கூறினார்.
பாஜகவை பொறுத்தவரை எப்போதும் தேசத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும் எனவும் யோகி ஆதித்யநாத் குறிப்பிட்டார்.