கிருஷ்ணகிரியில் இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கல்லூரி பேருந்தின் சிசிடிவி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குட்டப்பநாயக்கனூர் கிராமத்தை சேர்ந்த சந்தான பாண்டியன், தமது தாய் பூங்கொடியுடன் பையனூர் என்ற பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக வந்த தனியார் கல்லூரி பேருந்து இவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.