தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதில் இந்தியாவும் இங்கிலாந்தும் உறுதியாக இருப்பதாக அயலக காமன்வெல்த் மேம்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தியா- பிரிட்டன் இடையிலான வியூகரீதியிலான பேச்சுவார்த்தை லண்டனில் நடைபெற்றது.
இதில், மத்திய வெளியுறவுத் துறை செயலர் வினய் குவாத்ரா, பிரிட்டன் வெளியுறவுச் செயலர் பிலிப் ஆகியோர் சந்தித்து பேசினர்.
அப்போது தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான செயல்முறைகளைத் துரிதப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.