இந்தியர்களுக்கு இணைய வழியில் துரிதமாக விசா வழங்க தென் ஆப்பிரிக்கா பரிசீலித்து வருவதாக அந்நாட்டின் சுற்றுலா வளர்ச்சித் துறை அமைச்சர் பாட்ரீசியா டீ லில்லி தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், நிகழாண்டின் முதல் காலாண்டில் 24 ஆயிரத்துக்கும் அதிகமான இந்தியர்கள், தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுலா வந்ததாக குறிப்பிட்டார்.
மேலும், கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட ஜோஹன்னஸ்பர்க்- மும்பை இடையேயான நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.