கன்னியாகுமரி மாவட்டத்தில், பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றாங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் அதி கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் 1,சிற்றார் 2 ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் பேச்சிப்பாறை அணையின் நீர் மட்டம் 45 புள்ளி 72 அடியாக உயர்ந்துள்ள நிலையில் வினாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இதையடுத்து, தாமிரபரணி, கோதையாறு கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.