ஆந்திர மாநிலம் திருப்பதியில், தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
திருப்பதி உள்ளிட்ட 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ரீ பத்மாவதி மகிலா விஸ்வ வித்யாலயம் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை பரிசீலிப்பதற்காக, தனது ஆதரவாளர்களுடன் வந்த சந்திரகிரி சட்டமன்ற தொகுதி தெலுங்கு தேசம் வேட்பாளர் நானியை, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வன்முறை சம்பவம் நடந்த இடத்தில் சிறப்பு புலனாய்வு விசாரணை மேற்கொண்டது.