“தமிழகத்தில் கிராமந்தோறும் குத்துச்சண்டை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்” என தமிழ்நாடு குத்துச்சண்டை மாநிலத் தலைவர் பொன் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு குத்துச்சண்டை கழகத்தின் பொதுக்குழு கூட்டம் மற்றும் மாநில நிர்வாகிகள் தேர்வு புதுக்கோட்டையில் நடைபெற்றது.
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய, மாநிலத் தலைவர் பொன் பாஸ்கரன், “பல்வேறு பிரிவுகளாக குத்துச்சண்டை கழகங்கள் இருந்து வந்த நிலையில் ஒன்றிணைந்து ஒலிம்பிக் போட்டி செல்வதற்கு தேவையான பணிகளை செய்வோம் என்றார்.