நாகர்கோவிலில் பெயிண்டர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சபையார் குளம் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ், பெயிண்டர் வேலை செய்து வந்த இவர், மர்ம கும்பலால் கடந்த மாதம் 20-ம் தேதி கொலை செய்யப்பட்டார்.
இவ்வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், பைசல், தில்லை நம்பி ஆகியோர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.