அரியலூரில் குட்கா பொருட்களை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஜெயங்கொண்டம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 50 கிலோ குட்கா போதைப்பொருள்கள் சாக்குப் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.