உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ வாக்குச்சாவடியில் பாஜக எம்பியும், தேசிய செய்தித் தொடர்பாளருமான சுதன்ஷு திரிவேதி வாக்களித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
வாக்ளிப்பது நமது கடமை என்றும், நாட்டின் அனைத்து குடிமக்களும் தங்கள் வாக்குரிமையை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்திய கூட்டணி 300க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, தேர்தல் முடிவு வெகு தொலைவில் இல்லை என்றும் அப்போது அனைத்தும் புரியும் என்றும் கூறினார்.