பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் நிலவும் சவூதி அரேபியாவில் நீச்சல் உடை ஃபேஷன் ஷோ நடைபெற்றது அனைவரது புருவத்தையும் உயர்த்தியுள்ளது.
சவூதி அரேபியாவில் கடந்த 10 ஆண்டுகள் முன்பு வரை பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது அங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மேற்கு கடற்கரை பகுதியில் செயின் ரிகிஸ் ரெட் ஸீ ரிசார்ட்டில் நீச்சல் உடை ஃபேஷன் ஷோ நடைபெற்றது.
இதில் பெண்கள் நீச்சல் உடையில் பங்கேற்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.