திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே வாடிப்பட்டியில் முன்னறிவிப்பின்றி நடத்தப்பட்ட ரேக்ளா பந்தயத்தால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
உரிய அனுமதியின்றி ரேக்ளா பந்தயம் நடைப்பெற்றதால், கிரிவலம் சென்று முடித்து விட்டு மீண்டும் ஊர்களுக்கு திரும்பிய பக்தர்களும் அவதிக்குள்ளாயினர்.
எதிரே வரும் வாகனங்களை கருத்தில் கொள்ளாமல் அதிவேகமாக மாட்டு வண்டிகளை அடித்து விரட்டி ஓட்டியது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தியதை அடுத்து ரேக்ளா பந்தயம் கைவிடப்பட்டது.