மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வீட்டின் கதவை உடைத்து 22 சவரன் தங்க நகைகள் உள்ளிட்டவற்றை கொளையடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விளந்திட சமுத்திரத்தைச் சேர்ந்த திருமாறன் என்பவர், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் மீண்டும் ஊர் திரும்பியபோது, வீட்டின் முன்புற கதவு திறந்து கிடந்துள்ளது. இதனையடுத்து வீட்டிற்குள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 22 சவரன் தங்க நகைகள், 3 கிலோ வெள்ளி பொருட்கள், பணம் உள்ளிட்டவை கொள்ளை போனது தெரியவந்தது.
புகாரின் பேரில் சீர்காழி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.