தென் ஆப்பிரிக்காவில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவுவதால், பண்ணை உரிமையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
மேலும், பறவைக் காய்ச்சலை எதிர்கொள்ளும் வகையில், தடுப்பூசி திட்டத்தைச் செயல்படுத்துவதில் தென் ஆப்பிரிக்க அரசு போதிய கவனம் செலுத்தவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டில் மட்டும் அந்நாட்டில் பறவைக் காய்ச்சலுக்கு 95 லட்சம் கோழிகள் உயிரிழந்தன. இது அங்குள்ள மொத்த கோழிகளின் எண்ணிக்கையில், மூன்றில் ஒரு பங்கு என பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.