கொல்கத்தா உயர்நீதின்ற நீதிபதி சித்த ரஞ்சன் தாஷ் ஓய்வு பெற்ற நிலையில், தான் ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என்பதை நீதிமன்றத்திலே ஒப்புக்கொண்டார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
சிறுவயது முதல் இளமை அடையும் வரை ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தில் உறுப்பினராக இருந்ததாக கூறியுள்ளார்.
இருப்பினும், கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு நீதித்துறையில் சேர்ந்தாகவும், அதன் பிறகே ஆர்எஸ்எஸ்-லிருந்து விலகியதாகவும் ஓய்வு பெற்ற உயர்நீதின்ற நீதிபதி சித்த ரஞ்சன் தாஷ் தெரிவித்துள்ளார்.
இந்த அமைப்பின் மூலம் தான், தைரியமாகவும், நேர்மையாகவும் இருந்ததோடு, எல்லாவற்றிற்கும் மேலாக தேசபக்தி மற்றும் பணியில் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் என்பதை கற்றுக்கொண்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
குறிப்பாக கொல்கத்தா நீதிமன்றம் பற்றி கூறுகையில், தலைமை நீதிபதிகள் மாறினாலும் பாரம்பரியம் மாறாத ஒரே உயர்நீதிமன்றம் இதுமட்டுமே என்றும் சித்த ரஞ்சன் தாஷ் குறிப்பிட்டுள்ளார்.