என்னைப் போல் இன்னும் 200 இளையராஜாக்கள் உருவாக வேண்டும் என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
ஐஐடி மெட்ராஸில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அப்போது நிகழ்ச்சி மேடையில் பேசிய இளையராஜா, சென்னைக்கு 400 ரூபாய் பணத்தோடு இசையை கற்று கொள்ள வந்தத நான் இதுநாள் வரையிலும் இசையை கற்று கொள்ளவில்லை எனவும், மற்றவர்களுக்கு தான் கற்று கொடுத்து வருகிறேன் எனவும் தெரிவித்தார்.
மேலும், இங்குள்ள கலைகளை கற்றுக் கொண்டு எட்டுத்திக்கும் சென்று பரப்ப வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இசையினால் நல்ல தேசத்தை உருவாக்க முடியும் – காமகோடி
இதனை தொடர்ந்து தமிழ் ஜனம் செய்திகளுக்கு பிரத்தியேக பேட்டி அளித்த ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் காமகோடி, இசையினால் நல்ல தேசத்தை உருவாக்க முடியும் எனவும், இசையில் புதுமை வரவேண்டும் என்பதற்காகவே ஆராய்ச்சிக்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.