கொடைக்கானலில் மழையை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக படகுப் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
மலைகளின் இளவரசி என அழைக்கபடும் கொடைக்கானலில் கடந்த 17-ம் தேதி மலர் கண்காட்சி மற்றும் கோடைவிழா கோலாகலமாக தொடங்கியது.
இந்த கோடை விழாவின்போது பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நட்சத்திர ஏரியில் சுற்றுலா பயணிகளுக்கு மிதி படகு போட்டி நடைபெறும்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக கொடைக்கானலில் கனமழை பெய்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று நடைபெறவிருந்த படகு போட்டி வரும் 25-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.