சென்னிமலை அருகே வாய்ப்பாடி ரயில்வே நுழைவு பாலத்தில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வரும் நிலையில் வாய்ப்பாடி ரயில்வே நுழைவு பாலத்தில் மழைநீர் தேங்கியுள்ளது.
இதனால் வாகனங்கள் செல்லமுடியாத நிலை உள்ளதால், பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக 15- க்கும் மேற்பட்ட கிராமங்களில் போக்குவரத்து வசதி இல்லாமல் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதனால் மழைநீர் முறையாக செல்ல வடிகால் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும், இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து விடுபட மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என்றும், பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.