கல்வித்துறை முன்னேற்றத்தில் தமிழகம் இந்தியாவிலேயே சிறந்து விளங்குவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் உள்ளிட்ட பல திட்டங்கள் குழந்தைகள் ஆர்வத்துடன் கல்வி பயில உதவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பல்வேறு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதன் காரணமாக அரசுத் தொடக்கப்பள்ளிகளுக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
18 ஆயிரத்து 887 கோடி ரூபாயில் அனைத்து வகைப் பள்ளிகளிலும் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், எனவே தான் பள்ளிகல்வித்துறையில் தமிழ்நாடு இந்தியாவிலேயே சிறந்து விளங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இது பள்ளிகல்வித்துறையில் ஒரு புதிய சாதனை எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.