சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் செயல்பட்ட இடத்தில் பசுமைப் பூங்காவைப் அமைக்க வலியுறுத்தி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
வாழத் தகுந்த சென்னை மாநகரை உருவாக்க கோயம்பேடு பசுமைப் பூங்கா, உயிரிபன்மய செயல்திட்டம், சென்னை பொதுவெளிகள் செயல் திட்டம் ஆகியவற்றை அரசு செயல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், மால், ஐ.டி. பார்க் உள்ளிட்டவற்றை அமைக்கக் கூடாது என்றும் அதில் அவர் வலியுறுத்தியுள்ளார்.