பாஜகவை கலங்கப்படுத்த வேண்டும் என்ற திமுக அரசின் முயற்சி மிகப்பெரிய தோல்வியடைந்து அவமானத்தை சந்திக்கும் என பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்த 4 கோடி ரூபாய் பணம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் மற்றும் பல்வேறு அரசியல் பிரமுகர்களுக்கு சி.பி.சி.ஐ.டி போலீஸ்சார் சம்மன் அனுப்பியிருந்தனர்.
இந்த விவகாரத்தில், பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த நிலையில், அவரது வீட்டுக்கே வந்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்த நான்கு கோடி பணத்திற்கும், தனக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்று கூறியும், தமிழக அரசு அழுத்தத்தினால், தன்னிடம் விசாரணை நடைபெற்றதகாக குற்றச்சாட்டினார்.