காவிரியில் தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி ஒழுங்காற்று குழுவின் 96-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் கடந்த 16ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்தது,
இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30-வது கூட்டம் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் கூடியது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுச்சேரி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அப்போது, காவிரியில் தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டதோடு அடுத்த கூட்டம் ஜூன் மாதம் நடைபெறும் எனவும் அறிவித்தது.