“ஒரிசாவில் பிரதமர் மோடி பேசியதை, தமிழர்களுக்கு எதிராக திரித்து, முதல்வர் ஸ்டாலின் அப்பட்டமான பொய் அறிக்கை வெளியிட்டுள்ளார்” என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜெகநாதர் கோவிலின் தொலைந்துபோன சாவி தமிழகத்தில் இருப்பதாக பிரதமர் பேசியது பூரி ஜெகநாதரையும், தமிழ மக்களையும் அவமானப்படுத்துவது போல உள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
முதல்வர் ஸ்டாலின் கருத்துக்க கண்டனம் தெரிவித்து, ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கும், முதல்வர் ஸ்டாலின் அதற்கு கூறும் அர்த்தமும், குற்றச்சாட்டும் மத்திய அரசின் மீது கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சியை காட்டுவதாகக் கூறியுள்ளார்.
“பிரதமர் மோடி, தமிழ் கலாச்சாரம், பண்பாடு, திருக்குறள் ஆகியவற்றுக்கு கொடுக்கும் முக்கியத்துவமும், மக்களவையில் செங்கோலுக்கு அளித்த உயர் மரியாதையும், தமிழக மக்கள் மட்டுமின்றி, உலகத் தலைவர்கள் அனைவரும் நன்கு அறிவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தல் இறுதிகட்டத்தை அடைந்துள்ள நேரத்தில், “இண்டி” கூட்டணியின் தோல்வியை மறைப்பதற்கும், சமாளிப்பதற்கும் பிரதமர் பேசாத வார்த்தைகளை திரித்து, அவதூறு குற்றச்சாட்டுகளை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளார்
“தமிழர்களுக்கும், ஒரிசா மக்களுக்குமான நல்லுறவுக்கும், பிரதமர் மோடி தமிழர்கள் மீது கொண்டுள்ள பற்றுக்கும் எதிர்மறையான கருத்துகளை தமிழக முதல்வர் தெரிவிக்க வேண்டாம்” எனவும் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.