கழிவுநீர் அகற்றும் ரோபோடிக்ஸ் இயந்திரம் அறிமுகத்தால் மகிழ்ச்சி!
Mar 20, 2026, 04:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கழிவுநீர் அகற்றும் ரோபோடிக்ஸ் இயந்திரம் அறிமுகத்தால் மகிழ்ச்சி!

Murugesan M by Murugesan M
May 21, 2024, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மனிதனுக்கு மாற்றாக சென்னையில் அறிமுகப்படுத்தப்படும் கழிவுநீர் அகற்றும் ரோபோடிக்ஸ் இயந்திரம், தூய்மை பணியாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும் இந்த ரோபோடிக்ஸ் இயந்திரம் குறித்து விரிவாக இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்….

மனித கழிவுகளை மனிதர்களே அள்ளுவதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, கடந்த 2013ஆம் ஆண்டு மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துதற்கான PEMSR தடை சட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால், சட்டம் இயற்றப்பட்டும், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை ஒழிக்கப்பட்டதா என்றால் இல்லை என்று தான் கூறவேண்டும்.

இந்நிலையில், சென்னையில் கழிவுநீர் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை அகற்றுவதற்கு, 3 நவீன அடைப்பு நீக்கும் ‘பண்டிகூட்’ இயந்திரங்களை நடைமுறைப்படுத்த உள்ளதாக தூய்மை பணியாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. ONGC நிறுவனம் மற்றும் பிற நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட CSR நிதி மூலம் இந்த இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் திரு.வி.க.நகர், தேனாம்பேட்டை, அடையாறு ஆகிய 3 மண்டலங்களுக்கு தலா 1 இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தை கொண்டு, குழாய் வாயில்களில் அடைப்பு நீக்குதல், தூர் வாருதல் போன்ற பணிகளை எளிதாக செய்ய முடியும், மேலும், கழிவுநீர் குழாயில் இருக்கும் பொருட்களை கண்டறிந்து அகற்றவும், விஷவாயு கசிவை கண்டறியவும் சென்சார் கேமராக்கள் போன்ற சிறப்பு அம்சங்களும் ‘பண்டிகூட்’ இயந்திரத்தில் உள்ளதாக ரோபோடிக் ஆப்பிரேட்டர் தெரிவித்தார்.

குறிப்பாக, சென்னை முழுவதும், 4 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு மேல் கழிவுநீர்குழாய் அமைத்து, 9 லட்சத்து 30 ஆயிரம் கழிவுநீர் எடுத்து செல்லப்படுகிறது. பின்னர், சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு சென்று நாள்தோறும் சுமார் 745 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகிறது.

இந்நிலையில், நவீன அடைப்பு நீக்கும் ரோபோடிக் இயந்திரம் கொண்டு வந்திருப்பது, தூய்மை பணியாளர்களுக்கு வரப்பிரசாதமாகும் என்றால் அது மிகையில்லை. இதனால் அவர்களின் நேர விரயம், பணி சுமை மற்றும் உயிர் பலியும் வெகுவாக குறையும். இந்த நவீன ரோபோடிக்ஸ் கழிவு நீக்கும் இயந்திரம் சோதனை வெற்றி பெற்றால், சென்னை மாநகராட்சி முழுவதும் செயல்படுத்துவதே சென்னை குடிநீர் வாரியத்தின் இலக்காக உள்ளது.

கழிவுநீர் அடைப்புகளை நீக்க இறக்கப்படும் ஆட்கள் எதிர்பாராத விதமாக விஷ வாயு தாக்கி மரணத்தை சந்திந்து வருவது தற்போது வரை நீடிக்கும் சூழ்நிலையில், கழிவுநீர் அகற்றும் ரோபோடிக்ஸ் இயந்திரம், தூய்மை பணியாளர்களின் ஹீரோவாக திகழுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Tags: Delighted with the introduction of sewage disposal robotics machine!
ShareTweetSendShare
Previous Post

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார் மாரியப்பன் தங்கவேலு!

Next Post

இந்திய MNC பெண் ஊழியர்களை குறிவைக்கும் ISIS!

Related News

மேலூர் தொகுதி சுயேட்சை வேட்பாளர் முருகன் தீவிர வாக்கு சேகரிப்பு!

ஹோர்முஸ் நீரிணையை முடக்கும் ஈரானின் முயற்சி முறியடிப்பு – அமெரிக்கா அறிவிப்பு!

விளாத்திகுளம் மாணவியின் உடல் தகனம் – அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி!

திமுக அமைத்த கூட்டணி குளறுபடியில் உள்ளது – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

கூடலூர் அருகே செல்ஃபி எடுக்க முயன்றபோது 150 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர்!

திருச்சி திருவானைக்காவல் கோயில் பங்குனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தர்ம முனீஸ்வரனுக்கு திடீரென உடல்நலக்குறைவு – சிசிக்சைக்கு பின் மீண்டும் விசாரணை!

எடப்பாடியில் விடிய விடிய மழை – வட்டாட்சியர் அலுவலகத்தில் மழைநீர் தேக்கம்

சேலத்தில் திடீர் மழை – சாயக்கழிவு திறந்து விடப்பட்டதால் விவசாயிகள் கொந்தளிப்பு!

மதுரையில் கொட்டி தீர்த்த கனமழை – சாலைகளில் நீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி!

3-வது குழந்தையை பெற்றெடுக்கும் பெண்ணுக்கு ஓராண்டு மகப்பேறு விடுமுறை – சென்னை உயர் நீதிமன்றம்

அமைச்சர் பதவி வேண்டாம் என்றால் மட்டுமே சீட் – துரைமுருகனுக்கு திமுக மேலிடம் நிபந்தனை!

‘தக்னி’ இஸ்லாமியர்கள் ஆளுங்கட்சிக்கு எதிராக போர்க்கொடி!

அன்னை தமிழ் மன்றத்தின் முயற்சியால் பஹ்ரைனிலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள்!

ராஸ் லாஃபான் ஆலை மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் எதிரொலி – கேஸ் உற்பத்தியை நிறுத்தியது கேஸ்!

தேர்தல் பறக்கும் படையினரின் சோதனைக்கு எதிர்ப்பு – புதுச்சேரி முதல்வரின் ஆதரவாளர்கள் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies